கோயில் கோபுரங்களில் பொதுவாக
பல்வேறு புராண ரீதியான கடவுள் சிற்பங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள இந்த இராமாயணச்சாவடி கிழக்கு பகுதி முகப்பில் 'காந்திஜி,நேருஜி,நேதாஜி'
மூவரும் உள்ளனர். மேலும் மகான்களின் சிலைகளாக 'சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர், நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள், சுவாமி விவேகானந்தர், அருட்பெருஞ்சோதி இராமலிங்க அடிகள்(வள்ளலார்)' ஆகியோரின் சுதைச்சிற்பங்களும் சாவடி முன் முகப்பில் காணலாம்.
மேலும் இராமாயணச்சாவடி இடையர்கள் உறவின் முறை சார்ந்த ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில் கோபுரத்தில் 'மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய், ஜவஹர்லால் நேரு, நேதாஜி' ஆகியோரின் சிலைகள் இடம் பெற்றுள்ளன. இராமாயணச்சாவடி இடையர்கள் தேசியத் தலைவர்களை தெய்வங்களுக்கும் நிகராக அல்லது மேலாக மதித்து கோயில் கோபுரத்தில் 07-07-1949 ல் இடம் பெறச் செய்துள்ள இச்செயல் தமிழ்நாட்டில் பலரையும் ஆச்சர்யமூட்டியது.
புஷ்டியான தோள் கொண்டு சண்டைக்கு நிற்கும் குஸ்தி பயில்வான்களாக இராமாயணச்சாவடி பகுதி இடையர்கள் வாழ்ந்துள்ளததற்கான காலச்சுவடுகளை 'நினைவுச்சின்னமாக' ஸ்ரீநவநீதகிருஷ்ணன் திருக்கோயில் இராஜகோபுர சிற்பத்தில் மேற்கு பாகத்தில் உள்ள சிற்பம் உள்ளது. மதுரையில் புகழ்பெற்ற பிரண்ட்ஸ் ஜிம் நிறுவனரான 'திரு.மா.வ.சுப்பிரமணியக் கோனார்' சிறந்த குஸ்தி பயில்வான் ஆவார்.
இராமாயணச்சாவடி சிலவருடங்களுக்கு முன்பு வரை கல்யாண மண்டபமாகவும் இருந்தது. இது பொருளாதார வசதியற்றவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக, வசதியாக இருந்தது.
சில காரணங்களால் தற்போது இராமாயணச்சாவடி பெரும்பாலும் பூட்டப்பட்டே உள்ளது. இராமாயணக்கதை சொல்லப்பட்ட இடம் என்கிற அளவில் வழக்கொழிந்த அடையாளமாகவே சாவடி உள்ளது.
• சித்திரை திருவிழாவில் 5ம் நாள் தங்ககுதிரை வாகனத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் இச்சாவடியில் எழுந்தருளுகின்றனர்.
• திருக்கூடல் திவ்யதேசத்து கூடலழகர் வைகாசி ப்ரம்மோத்ஸவம் 4ம் நாள்
இந்த சாவடியில் எழுந்தருளுகிறார்.
• திருக்கூடல் மலை ஸ்ரீநவநீதப்பெருமாள் சுவாமி ஆடிமாதத் திருவிழாவில் குதிரை வாகனத்தில் இச்சாவடியில் காட்சி தருவாராம்
• வடக்கு வாசல் செல்லத்தம்மன் கோயில் தைமாதம் 9ம் திருவிழா திருத்தேர் உற்வசத்தன்று இரவு இந்த சாவடியில் தங்கி நாடகம் பார்த்து மறுநாள் மஞ்சள் நீராட்டு நடை பெறுவது சிறப்பாகும். (திருவிழா சமயம் சாமி வந்து இறங்கி மக்களுக்குக் காட்சி கொடுக்கும் போது இரவு வள்ளி திருமணம் நாடகம் முன்பு நடக்குமாம்.)
• ஆவணி மாதம் ஸ்ரீஜயந்தி உத்ஸவ காலங்களில் சாவடி திறக்கப்படுகிறது.
• தண்டாயுத பாணிக்காக பிரதிமாதம் கார்த்திகை நட்சத்திரம்,பிரதிமாத வளர்பிறை,தேய்பிறை சஷ்டி, கந்தர்சஷ்டி ஆறு நாட்கள் சாவடி திறக்கப்படுகிறது.
• விநாயகர் சதுர்த்தியன்று 'திருமலை விநாயகர்' வழிபாட்டிற்காக சாவடி திறக்கபடுகிறது.
• ஸ்ரீராமநவமி காலங்களில் ஸ்ரீராமர் வழிபாட்டிற்காக சாவடி திறக்கப்படுகிறது.
[REFERENCE. FROM:-
'The Hindu' News Paper Article by S.S.Kavitha
(History meets religion)
Dated: MAY 05, 2007
....The simple structure with 16 beautifully carved pillars served the purpose of a community centre that provides space for the residents to convene meetings to discuss issues threadbare, says V.R. Suryanarayanan, another resident of the area."Even disputes that were not resolved were settled here because people were first made to listen to the story and morals highlighted in Ramayana.
....he says. The `Chavadi' or the community centre that was once a meeting place slowly turned into a marriage hall. But soon again, it again became a meeting centre. The doors of Chavadi opens only to accommodate Goddess Meenakshi, Goddess Chellathamman and Sri Krishna during the festival time of the respective temples.]
எனது வைணவத்தோழரும், கதாகாலட்சேப அதிகாரியுமான திருக்கூடல் செ. ஜகந்நாத பராங்குச தாஸர் மூலம் வைணவப்பற்றுள்ள அடியேனின் சிறு முயற்சியாக |"ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கு", மற்றும் "ஏத்துகின்றோம் நாத்தழும்ப ராமன் திருநாமம்"| ஆகிய தலைப்புக்களில் இரு நாட்கள் (20.06.2010 & 04.07.2010) வைணவ நடைமுறையில் உபன்யாசம் நடத்தப்பட்டது.
சாவடியின் வெளியே ஈசான்ய மூலையில்(வடகிழக்கு) நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு தனிக்கோயில் உள்ளது.
நாச்சிமுத்து கருப்பண்ணசாமிக்கு ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமைக்கு "சந்தன சாற்றுப்படி' நடக்கும். இந்த கருப்பசாமியின் சிறப்பு என்று சொல்வதெனில் வாயுக்குத்து வந்து மிகவும் கஷ்டப்படுபவர்கள் "நாச்சிமுத்துக் கருப்பா மூச்சுக்குத்தை வாங்குப்பா"
என்று மூன்று தடவை கூறி வழிபட்டால் மூச்சுக்குத்து நீங்குவதாக இப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இந்த நாச்சி முத்து கருப்பண்ணசாமி ஸ்ரீலஸ்ரீ சிவநாராயண தேசிகர் எனும் நாச்சிமுத்து பழனிச்சாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கோடாங்கி செல்லையாக்கோனார் அவர்களின் வாய்மொழித்தகவலாக 02.08.2012 ல் களஆய்வின் போது சந்தித்த போது கூறினார்.
மதுரையிலேயே வடக்கு மாசிவீதி பகுதியில் தான் அதிகமான சுதந்திர போராட்ட தியாகிகள் உருவாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இராமாயணச்சாவடி பகுதி இடையரான 'திரு.ஏ.வி.செல்லையாக்கோனார்'
ஒரு தலைசிறந்த நாட்டுப்பற்றாளர். மதுரை நகர சுதந்திரப் போரட்ட வீரர்களை ஒன்றிணைத்து அந்தச் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்தவர் செல்லையாக்கோனார் ஆவார்.
இவர் தன்னுடைய சுதந்திரப் போரை 1930இல் அன்னிய துணி பகிஷ்காரப் போராட்டத்தில் தொடங்கினார். 1942லும் புரட்சியில் பங்கு கொண்டு சிறை சென்றார். இவர் ஒரு ஆண்டு காலத்திற்கு மேல் சிறை தண்டனை பெற்று இருந்திருக்கிறார். 1942இல் ஒரு குண்டு வீச்சு சம்பவம். அதில் உயிர் இழந்திருக்க வேண்டிய இவர், மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்தார். அந்த குண்டு வீச்சினால் இவர் தலையில் ஏற்பட்ட தழும்பு கடைசி வரை இருந்தது.
இவருடைய சகோதரர் 'திரு. அணுகுண்டு ஏ.வி.அய்யாவு' அவர்களும் பிரபலமான சுதந்திர போராட்டக்காரர்
ஆவார். இவரும் பிரிட்டிஷாரை எதிர்த்து பலமுறை சிறை சென்றிருக்கிறார். மதுரையில் வைணவர்கள் பெரிதும் கொண்டாடும் மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டும் பொட்டல்) என்னுமிடத்தை 'ஜான்சி ராணி பூங்கா'வாக மாற்றியதற்கும், திண்டுக்கல் ரோடு என்றிருந்ததை 'நேதாஜி ரோடாக' மாற்றியதற்கும் காரணமாக இருந்தவர் இவரே ஆவார். மேலும் (கிருஷ்ணராயர் தெப்பகுளம்) ஞாயிற்றுக்கிழமை சந்தையை 'திலகர் திடல்' என மாற்றியதும் இவரே.
அந்நாளைய சென்னை மாகாண முதல்வர் பெருந்தலைவர் திரு. காமராசரின் அன்புக்கும் பாசத்திற்கும் உரியவராக அணுகுண்டு அய்யாவு இருந்தார். அதன் காரணமாக வடக்கு மாசி வீதி பகுதியில் இவரது அடுத்த தலைமுறை தேசியவாதி இளைஞர்களை ஒருங்கிணைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கத்தலைவராக இருந்த
'திரு.இ.பெ.பாலச்சந்தர்' (E.P.) அவர்களை வழிநடத்தியதன் மூலம் 'காமராசர் எழுச்சி மன்றம்' என்கிற சமூகநலன் கொண்ட அமைப்பு பிற்காலத்தில் உருவாவதற்கும் இவரே தூண்டுகோலாக இருந்தார்.
பகுத்தறிவாளரான நடிகவேள் திரு. எம்.ஆர்.ராதா மதுரையில் நடத்திய 'கீமாயணம்' நாடகத்தை எதிர்த்த பெருமைக்குரியவர். பிற்காலத்தில் நடிகவேள் அவர்களுடன் சமரசம் ஏற்பட்டு 'உலகம் சிரிக்கிறது' என்கிற படத்திலும் நடித்தார்.
சினிமா ஜோதி, அணுகுண்டு ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தியவர். மதுரையில் பிச்சைக்காரர்களை அழைத்து மாநாடு நடத்தி அன்றைய அரசியல் மேல்மட்டத்து தலைவர்களின் கவனத்தையே திருப்பி புரட்சி செய்தார்.
திருமணம் செய்து கொள்ளாது தேசத்திற்காக போராடிய ஒரு முக்கிய பெருமையும் இவருக்குண்டு.
இவர்களுக்கு அடுத்து பதுமைக் கம்பெனி திரு.வீரணக்கோனார்
சுதந்திர போராட்டங்களில் (வடக்கு மாசி வீதியில்) பெரும் பங்கு வகித்த
மற்றொருவர் ஆவார்.
பகுத்தறிவாளரான நடிகவேள் திரு. எம்.ஆர்.ராதா மதுரையில் நடத்திய 'கீமாயணம்' நாடகத்தை எதிர்த்த பெருமைக்குரியவர். பிற்காலத்தில் நடிகவேள் அவர்களுடன் சமரசம் ஏற்பட்டு 'உலகம் சிரிக்கிறது' என்கிற படத்திலும் நடித்தார்.
சினிமா ஜோதி, அணுகுண்டு ஆகிய பத்திரிக்கைகளையும் நடத்தியவர். மதுரையில் பிச்சைக்காரர்களை அழைத்து மாநாடு நடத்தி அன்றைய அரசியல் மேல்மட்டத்து தலைவர்களின் கவனத்தையே திருப்பி புரட்சி செய்தார்.
திருமணம் செய்து கொள்ளாது தேசத்திற்காக போராடிய ஒரு முக்கிய பெருமையும் இவருக்குண்டு.
இவர்களுக்கு அடுத்து பதுமைக் கம்பெனி திரு.வீரணக்கோனார்
சுதந்திர போராட்டங்களில் (வடக்கு மாசி வீதியில்) பெரும் பங்கு வகித்த
மற்றொருவர் ஆவார்.
தொடர்ச்சி அடுத்த பதிவு-Post ல பார்ப்போம்
No comments:
Post a Comment