Monday, October 1, 2018

இராமாயணச்சாவடி இடையர்கள் (பகுதி - 7)


மதுரையில் ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினர் ஆடுகளை வளர்த்து வியாபாரம் மற்றும் பிற தொழில்களும் செய்து வருகின்றனர். ஆடுகளை அடைத்து வைப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் நிலையான ஒரு இடம் இல்லாதது ஒரு குறைபாடாக இருந்தது. இக்குறைபாட்டினை நீக்கும் பொருட்டு திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் தலைமையில் நான்கு பேர் சேர்ந்து கி.பி.1899 ஆம் ஆண்டு சிம்மக்கல் அருகில் திரு.வி.க சாலையில் 92 சென்ட் இடத்தினை வாங்கினர். அன்றிலிருந்து அந்த இடத்தை ஆயிரம் வீட்டு யாதவ சமூகத்தினைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகள் ஆடுகள் அடைப்பதற்கும், ஆடுகள் வியாபாரம் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கி.பி.1924 ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என தீர்ப்பளித்தது. வழக்கை தொடுத்தவர்கள் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் இடம் ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளுக்கு பாத்தியப்பட்டது என்று  தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்தவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்தனர். இந்த முறை இரு தரப்பாரும் கலந்து பேசி சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை டிரஸ்ட் கி.பி.1927 ல் உருவாக்கப்பட்டது. இதன் முதல் டிரஸ்டியாக திரு.வெ.பெ.இருளப்பக்கோனார் நியமிக்கப்பட்டார். இவர் கி.பி. 1927 முதல் கி.பி 1947 வரை டிரஸ்டியாக பணியாற்றினார். பின்னர் இரண்டாம் டிரஸ்டியாக இ.சுடலைமாடக்கோனார் கி.பி 1947 முதல் 1953 வரை பணியாற்றினார். பின்னர் மூன்றாம் டிரஸ்டியாக வீ.சி.பி.வீரண்ணக்கோனார் கி.பி 1953 முதல் 1988 வரை பணியாற்றினார்.
இவர் காலத்தில் 
பக்தியில் சிறந்த ஆயிர வீட்டு யாதவ சமுதாய மக்கள் டிரஸ்ட் மூலமாக இறைத்தொண்டாற்றிட எண்ணினர். அதன்படி வடக்கு மாசி வீதி ஸ்ரீநவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவத்தை டிரஸ்ட் சார்பில் நடத்துவதாக முடிவு செய்தனர். ஆட்டு மந்தை சார்பாக (ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை)
அச்சமூகத்தினரின் தெய்வமான ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமிக்கான ஸ்ரீஜயந்தி 8ம் நாள் உத்ஸவத்திற்காக (மன்மத வருடம் ஆவணி 31ம் தேதி) 16-09-1955ம் வருடத்தில் அழகர் தங்கக்குதிரையை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆலவாய் நகருக்குள் கொண்டு வந்தனர். அது வரை கட்டைக்குதிரையில் புறப்பாடு கண்ட ஸ்ரீநவநீதகிருஷ்ணனுக்கு தங்கக்குதிரையில் புறப்பாடு கண்டார் (ஆதாரம்- ஆட்டுமந்தையின் அலுவலக அறையில் அழகர் குதிரையில் ஸ்ரீநவநீதகிருஷ்ணன் எழுந்தருளி வீதியுலா கண்ட புகைப்பபடம் உள்ளது)

 வீ.சி.பி.வீரணக்கோனார் காலத்தில் அழகரின் தங்கக்குதிரையை முன் மாதிரியாகக் கொண்டு கி.பி.1957 ல் புதிதாக வெள்ளிக்குதிரை
 வாகனம் செய்யப்பட்டது. 
இந்த புதிய வெள்ளிக்குதிரை விளம்பி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி, 01.09.1958 ல் ஸ்ரீநவநீதகிருஷ்ணருக்காக அலங்காரம் செய்து முதன்முதலில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
அதன்படி அன்று முதல் இன்று வரை நவநீதகிருஷ்ணன் கோவில் ஸ்ரீஜயந்தி திருவிழாவில் 8ஆம் நாள் குதிரை வாகன மண்டகப்படி உற்சவம் டிரஸ்ட் சார்பில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
வெள்ளி குதிரை வாகனம் தற்போது ஆட்டுமந்தையில்  பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீஜயந்தி 8ம் நாளன்று இராமாயணச்சாவடிக்கு வானவேடிக்கையோடு வெள்ளிக் குதிரையை அழைத்து கொண்டு வருவர்.
• மதுரை பாத்திமா கல்லூரி அருகில் உள்ள வழி விடும் நரசிங்கப்பெருமாள் கோவிலில் 'புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை' பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் ஆட்டுமந்தை ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக அன்று ஒரு நாள் மட்டும் பெருமாள் விக்ரகத்தைத் தொட்டு பூஜை செய்பவர் இந்த இடையர் சமூகத்தைச் சேர்ந்தவர். சில தலைமுறைகளுக்கு முன் இந்த இடையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆற்றில் இருந்து நரசிங்கபெருமாள் விக்ரகத்தை கண்டெடுத்து, அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து வழிவிடும் பெருமாள் கோவிலை உருவாக்கினார். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மட்டும் பெருமாளைத்தொட்டு பூஜை செய்து வருகின்றனர். தற்போது விக்ரகத்தை கண்டெடுத்தவரின் பேரனாகிய 'மங்கான் பெரியசாமி கோனார்' என்பவர் தற்போது பூஜை செய்து வருகிறார். அன்று ஒரு நாள் மட்டும் கோவிலில் வழக்கமாக பூஜை செய்து வரும் பிராமணர் பூஜை செய்வது இல்லை.


A.V.M.வீரணக்கோனார் கோர்ட் ரிசீவராக இருந்தபோது 09-07-2001 ல் இராமாயணச்சாவடி மற்றும் ஸ்ரீநவநீத கிருஷ்ணன் திருக்கோயில் ஆகியவற்றிற்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது
என்கிற தகவலோடு மேலும் இந்த ஆய்வை மேலும் தொடர விரும்பாமல்
நிறைவுப்பகுதியை மிகச் சங்க்ரஹமாக சுருக்கியுள்ளேன். 'ஒற்றுமையே பலம்' என்று மற்ற சமூகங்களுக்கு பாடமாக இருந்த இந்த 'புதுநாட்டு இடையர்கள்' தங்களுக்குள்ளேயே போட்டி,பொறாமை,ஓரவஞ்சனை கொண்டு வீழ்ச்சியை நோக்கி 'சிவப்புக் கம்பளம்' விரித்து க்ஷீண கதியடைந்த இச்சமூகத்தினரைப் பற்றி மேலும் விவரிக்க எனக்கு மனம் இயலவில்லை.

• 5000 வருடங்களுக்கு முன்பு காந்தாரி மற்றும் கர்க ரிஷி தந்த சாபத்திலிருந்து  இந்த புது நாட்டு இடையர்கள் கண்ணனின் அருளால் தப்பித்து....  இதுவரை வந்து விட்டனர்.

இனி..... ... ..... ....

|ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்|

•|நிறைவுற்றது|•

•••இந்த காலவெளிப்பயணத்தில் இராமாயணச் சாவடி இடையர்களின் காலச்சுவடுகளை சேகரிக்க என்னோடு பயணித்த என் ஆருயிர் நண்பர், வைணவச்செல்வன், 'திருக்கூடல். செ.ஜகந்நாத பராங்குச தாஸர்' இந்த ஆய்வுப்பயணத்திற்கு ஊக்குவித்து உற்ற துணையாக இருந்தார்.

இந்த ஆய்வுக் கட்டுரை உருவாக பல நுட்பமான செய்திகளைத் தந்த
• தெய்வத்திரு. வே.நா.திருமால்சோலைமணி தாத்தா மற்றும்
• திரு. பட்டி.கே.பாலகுரு,
• திரு. கோடாங்கி செல்லையாக்கோனார்
• திரு. நாகேந்திரக் கண்ணன்(யாதவர் கல்லூரி),
• திரு. அ.வீ.நவநீத கிருஷ்ணன்(அண்ணா),
• டிரில் மாஸ்டர் திரு. சௌந்தர்ராஜன் நாயுடு, மற்றும்
• திரு. கோவிந்த ராமாநுச தாஸர் ஆகியோர்கள் பெரும் நன்றிக்கு உரித்தானவர்கள்.

• திரு. பி.பிரசன்னா
• கோடாங்கி செல்லையாக்கோனார் மகன்          திரு. செ.சுந்தர்,
• திரு. அ.வீ.பா.அசோக் குமார்
• திரு. பிருத்திவிராஜன் (எ) நந்து
• திரு. ஆயர்.தி.குமார்,
• திரு. ந.தெய்வேந்திரக் குமார்,
போன்றோர் கள ஆய்வில் பல உதவிகள் செய்தனர்.

            அன்புடன்

       ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்



4 comments:

  1. •| ஆட்டுமந்தை டிரஸ்டிக்கள் பட்டியல்|•

    • டிரஸ்ட் நிறுவன தலைவர்
    வெ.பெ.இருளப்பக்கோனார்
    (கி.பி.1927 - 1947)
    ஆட்டு மந்தை டிரஸ்டை உருவாக்கினார்.

    • இ.சுடலைமாடக் கோனார்
    (கி.பி.1947-1953)
    சுற்றுப்புற கோட்டைச் சுவரைக் கட்டினார்
    தரையில் பட்டியல் கல் பாவினார்.

    • வீ.சி.பி.வீரண்ணக்
    கோனார் (கி.பி.1953 – 1988)
    இவர் காலத்தில் கி.பி.1957 ல் வெள்ளிக்குதிரை
    வாகனம் செய்யப்பட்டது.

    • மா.வ.சுப்ரமணியக் கோனார் (கி.பி.1988 – 2000)
    இவர் காலத்தில் ஆட்டுமந்தை ட்ரஸ்ட் செலவில் புட்டுத்தோப்பு நாச்சிமுத்து பழனிசாமி மடம் 01-02-1998 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
    1999 ல் ஆட்டு மந்தை திருமண மண்டபம் கட்டப்பட்டது. (ஆயிரம் வீட்டு யாதவ ஆட்டு மகமை வியாபாரிகளின் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபம், யாதவர் வீட்டு விசேஷங்களுக்கு குறைந்த வாடகையில் அளிக்கப்படுகிறது. இதில் ஆயிர வீட்டு யாதவர், மற்ற யாதவர் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைத்து யாதவர்களுக்கும் மிகக்குறைந்த வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.)

    • நா.ஆறுமுகம் (கி.பி.2000 – 2010)
    இவர் காலத்தில் ஆட்டுமந்தை திருமண மண்டபத்திற்காக 'கல்யாண விநாயகர்' ஆலயம் கட்டப்பட்டது.

    • வீ.க.து.முருகேசன்
    (எ) வீரணன் (கி.பி.2010 –14)
    • வாசுக்கோனார்
    • வி.சி.பி.வி. இளங்கோவன்
    .....ஆகியோர் தொடர்ந்து பணியாற்றினர்

    ஆட்டு மந்தை டிரஸ்ட் கட்டடம் 'ராஜமனை' என்ற அமைப்பில் நான்கு புறமும் பாதையுடன் அமைந்துள்ளது.
    வாஸ்து சாஸ்திரத்தின் படி நான்கு புறமும் பாதை உள்ள 'ராஜமனை' எனப்படும் இடம் செல்வத்திலும், அதிகாரத்திலும் சிறந்து விளங்கும் என்று நம்பப்படுகிறது.

    ReplyDelete
  2. • தருமத்துப்பட்டி செப்பேடு
    17-06-1645 & 19-03-1655
    • இராமாயணச்சாவடி கல்கட்டடம் 02-09-1881
    • கம்பத்தடி கிருஷ்ணன் பெரிய கோயிலில் பழநிச்சாமிபிரதிஷ்டை செய்த நாள் - 1909
    • உறவின்முறை ட்ரஸ்டிகள்
    1. M.M.முருகக்கோனார்
    V.R.வன்னியக்கோனார்
    (22-05-1910 to 20-03-1912)
    2. A.பூமாலைக்கோனார்
    (சிறப்பு ட்ரஸ்டி) (21-03-1912 to 07-03-1914)
    3.குருசாமிக்கோனார்
    (சிறப்பு ட்ரஸ்டி)
    (08-03-1914 to 23-06-1915)
    4.தெய்வேந்திரக்கோனார்,மீனாட்சிக்கோனார்
    (24-06-1915 to 06-11-1927)
    5. E.V.V.வன்னியக் கோனார் (07-11-1927 to 01-08-1933)
    6.பட்டி.வீரணக்கோனார்
    பட்டி .M.ராமசாமிக்
    கோனார்
    பட்டி.T.பாலகிருஷ்ணக்கோனார் (01- 09 -1933 முதல்)

    • இராமாயணச்சாவடி -நவநீத கிருஷ்ணஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 07-07-1949
    • ஸ்ரீராமர் சந்நதி கும்பாபிஷேகம் -
    22- 05-1951
    • ஸ்ரீராமர் உத்ஸவ விக்ரஹம் 21- 06 -1951
    • அழகர் குதிரை வந்த நாள் 16-09-1955
    • புதிய வெள்ளிக்குதிரை செய்யப்பட்ட நாள்
    01- 09 -1958
    • புட்டுத்தோப்பு பழநிச்சாமி மடம் கும்பாபிஷேகம் - 01-02-1998
    • இராமாயணச்சாவடி மற்றும் நவநீத கிருஷ்ணன் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 09-07-2001

    ReplyDelete
  3. • ஆயிரம் வீட்டு யாதவர்கள் வழிபடும் குலதெய்வங்கள் பட்டியல்

    1.மேலக்கருப்பணசாமி கோயில் - செந்தியம்மன் கோயில்
    (மணக்கரை)
    2. மங்காயி அம்மன் கோயில் (உடையவர் கோயில்)
    விளாச்சேரி மொட்டமலை -(வல்லநாடு)
    3.கடம்பங்குளத்தான் கோயில்
    4.புளியமரத்தான் கோயில்
    5.மேலச் சப்பாணி கோயில்(மணக்கரை)
    6.தோட்டக்கார அம்மன் கோயில் -ஆயிரங்காவு அய்யன் (மேலப்பாட்டம்)
    7.வீரண்ணசாமி கோயில்
    (மேலப்பாட்டம்-செஞ்சி)
    8.ஆண்டாளம்மன் கோயில்
    9.நல்லமாடன் கோயில்(மேலப்பாட்டம்)
    10.தெய்வேந்திர சாஸ்தா கோயில்-வடக்குமாசி வீதி (மூலைக்கரைப்பட்டி)
    11.பெரிய நயினார் சாஸ்தா கோயில் (மேலப்பாட்டம்)
    12.நல்லதங்காள் கோயில் (சித்தூர் தென்கரை மகாராஜர்)
    13.பாண்டியன்-பத்திரகாளி கோயில் (மலையன் குளம்-பாடகலிங்க சாஸ்தா)
    14.பத்திரகாளியம்மன் கோயில் (காஞ்சிபுரம் & -மேலப்பாட்டம்)
    15.சீலைக்காரியம்மன் - மேகலிங்க சாஸ்தா
    16. வெயில் முத்து அய்யன்
    17.கற்கு வேல் அய்யன் கோயில்
    18.செம்பாயி அம்மன் கோயில் - வீரண சாமி
    19. வெயில் முத்து அய்யன்)கீழச்சப்பாணி
    20.தெய்வேந்திர சாஸ்தா (பஜனை மடம்)
    21தெய்வேந்திர சாஸ்தா கோயில் ( சாவடி எதிரில்)
    22.வன்னியசாமி - கைலாசநாதர் கோயில் (திம்மராஜபுரம்)
    23.சங்கையா கோயில் - அழகுமலையான் சாமி
    24.ஏழுமலையான் சாமி (கோயில் வீடு)
    24.ரெங்கநாத சாமி கோயில்
    26. முத்துக்கருப்பண சாமி கோயில் - சிவகாசி
    27. நல்லாண்டவர் கோயில் - மாமுண்டி
    மணப்பாறை
    28.மருதுடைய அய்யனார் கோயில் - ஆவுடையம்மன் (மருதங்குடி)
    29.நடுக்கம்பாறை சாஸ்தா (திருக்குறுங்குடி)
    30. வீரக்குடி கரை மேல் முருகன் (சாவடிக்கு எதிரே)
    31. மேகலிங்க சாஸ்தா - சிவகாசி
    32.சின்னமாடியம்மன் கோயில் (துட்டுக்கடைவன்னியக் கோனார் சந்து)
    34.விளங்காயி அம்மன் கோயில் (சாவடி எதிர் சந்து)

    ReplyDelete
  4. 1.அய்யனாபுரம்
    2. ஆலங்குளம் 3.இடையபட்டி 4.சின்னப்பட்டி 5.சால்வார் பட்டி 6.முருகார்பட்டி 7.பொய்கைக்கரைப்பட்டி
    8. முத்துப்பட்டி
    9. நரசிங்கம்பட்டி
    10. சுந்தர்ராஜன்பட்டி
    11.மலையப்பட்டி
    12. பெரியப்பட்டி
    13.பூலாம்பட்டி
    14.புதுப்பட்டி 15.தாமரைப்பட்டி
    16.திருப்பாலை
    17.வீரபாண்டி
    18.திருமால்புரம்
    19.சின்னமாங்குளம்
    20.பரசுராமன்பட்டி
    21.பாறைப்பட்டி
    22.சங்கிலிப்பட்டி
    23.கொசவபட்டி
    24.கிடாரிபட்டி
    25.வெள்ளாளப்பட்டி
    26.அண்டாம்பட்டி
    27.மஞ்சம்பட்டி
    28.பூண்டி
    29.அருகனூர்
    30.வலையபட்டி
    31.தொட்டியபட்டி
    32.சொக்கநாதம்பட்டி
    33.அரிட்டாபட்டி
    34.தாதம்பட்டி
    35.குசவகுண்டு
    36.பாரபத்தி
    37.கொரண்டி
    38.வெள்ளாகுளம்
    39.காஞ்சரம்பட்டி
    40.மந்திகுளம்
    41.அச்சம்பட்டி
    42.கருவனூர்
    43.ஊமச்சிகுளம்
    44.கொருக்குளிப்பட்டி
    45.உத்தங்குடி
    46.மேலமடை
    47.வடபழஞ்சி
    48.தென்பழஞ்சி
    49.அச்சம்பத்து
    50.ஆண்டிபட்டி
    51.ரெங்கநாதபுரம் (ஸ்ரீவி)
    52.
    53.
    54.
    55.
    56.மதுரை இடையர் வீதி
    (மேலத்தெரு,நடுத்தெரு,
    கீழத்தெரு)

    ReplyDelete