தென்னிந்திய குலங்களும் குடிகளும் (Castes and Tribes of Southern India. published in 1909) என்கிற ஆங்கில நூலில் எட்கர் தர்ஸ்டன் (Edgar Thurston) என்கிற ஆங்கிலேயர் மதுரை வடக்கு மாசி வீதி 'இராமாயணச்சாவடி இடையர்'களின் பூர்வீகம் பற்றி கூறியுள்ளார். கிட்டத்தட்ட 300 இனக்குழுக்களைப் பற்றி ய தகவல்கள் அடங்கிய ஏழு பாகங்கள் கொண்ட அந்நூலின் இரண்டாம் பாகத்தில் 'இடையர்' பற்றி (352 முதல் 366 ம் பக்கங்கள் வரை) கூறும் போது இராமாணச்சாவடி இடையர்களின் பூர்வீகக் கதையை பதிவு செய்துள்ளார்.
திருநெல்வேலியிலிருந்து
மதுரை வடக்கு மாசி வீதி பகுதிகளில் புலம் பெயர்ந்த புதுநாட்டு இடையர்களோடு, கவரா நாயுடு மற்றும் பிரமலைக்கள்ளர் சமூகத்தினரும் தொடர்பு கொண்டிருந்தனர். அத்தகைய நாட்டு இடையர் சமூக மக்களின் பூர்வ கதையை வரலாற்றுத் தரவுகளோடு ஆய்வியல் அடிப்படையில் ஆதாரங்களுடன் விரிவான தொகுப்புக் கட்டுரையாக உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். தென்னிந்திய இனக்குழுக்களில்
'நாயக்கர்கள்' என்று பொதுவாகச் சொல்லப்படுபவர்கள் கம்பளத்தார்கள் என்றும் தொட்டியர் என்றும் சொல்லப்படுகிறார்கள். கொல்லவார், சில்லவார் .தொக்லவார், கம்மவார், பலிஜா என பல்வேறு உட்பிரிவுகள் கொண்ட ஆந்திரப்பகுதி மக்கள் இவர்கள். அதிகமும் பாறைகள் நிறைந்த 'ராயலசீமா' பகுதியில் ஆடுமாடு மேய்த்தும் பொட்டல் வேளாண்மை செய்தும் வாழ்ந்தவர்கள்.
மதுரை நாயக்கர்களைப்பற்றிய வரலாற்றுக்கு ஜெ.எச்.நெல்சனின் (J. H. Nelson-1898 )மதுரை ஆவணப்பதிவே (Madura Country Manual) முக்கியமான முதல் நூலாகும். அதன்பின்னர் பேராசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர் 1917-21ல் சென்னை பல்கலையில் ஆய்வுமானாவராக இருந்தபோது அதுவரை விரிவான ஆய்வுகள் செய்யப்படாத மதுரை நாயக்கர் வரலாற்றை விரிவான ஆய்வுக்குப்பின் ஆங்கிலத்தில் ‘மதுரைநாயக்கர் வரலாறு’ எனும் நூலினை எழுதினார். இந்நூல் 1924ல் சென்னைப்பல்கலை வரலாற்று பேராசிரியரான எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காரின் முன்னுரையுடன் 'The history of Nayaks of Madura' என்ற தலைப்பில் வெளிவந்தது. இந்நூலை அடியொற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தமனார் தமிழில் எழுதிய ‘மதுரை நாயக்கர் வரலாறு’ தெளிவாகவும் சுருக்கமாகவும் நாயக்கர்களின் ஆட்சியையும் வீழ்ச்சியையும் சொல்லும் வரலாற்று நூலாகும்.
பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவரான பாண்டியர்களுக்கு
உலகில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு உண்டு. அதில்
நாம் இப்போது காணப்போவது 14ஆம் நூற்றாண்டின் கோரமுகம். மாறவர்மன் குலசேகரனுடைய மகன்கள் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் இருவருக்கும் நடந்த பங்காளிச் சண்டை .
பாண்டிய மன்னர்கள் வாரிசு சண்டையிட்டுக்கொண்டு பாண்டிய அரசை துண்டு துண்டாக வலிமை யற்றதாக ஆக்கி வைத்து இருந்தனர். இந்த பங்காளிச்சண்டையால்
கி.பி.1311ல் மாலிக் கபூர், தமிழ்நாட்டில் பகைவர் தடைகள் இன்றி காஞ்சிபுரம்கோயில்கள், சிதம்பரம் நடராசர் கோயில், திருவண்ணாமலை,திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் மற்றும் மதுரைமீனாட்சியம்மன் கோவில்களுக்குபெருத்த சேதத்தை விளைவித்ததுடன், கோவில் செல்வங்களை கொள்ளையடித்தார்.
இஸ்லாமிய வரலாற்று அறிஞரான 'ஜியாவுதின் பருணி'யின் கூற்றுப்படி, மாலிக் கபூர், தென்னிந்தியாவில் கொள்ளையடித்த செல்வங்களையும் மற்றும் 240 டன் தங்கத்தையும், 612 யானைகள், 20,000 குதிரைகள் மேலேற்றி தில்லிக்கு வெற்றி வாகையுடன் திரும்பிச் சென்றான் எனக் கூறுகிறார். தில்லி சுல்தான் அலாவூதின் கில்ஜி, மாலிக் கபூரின் வெற்றிகளையும், கைப்பற்றிய தென்னிந்த்திய செல்வங்களைக் கண்டு பாராட்டி, மாலிக் கபூருக்கு தில்லி சுல்தானகத்தின் “தலைமைப் படைத்தலைவர்” பதவி வழங்கி பாராட்டினார்.
இந்த மாலிக்காபூரின் படையெடுப்பு தென்னகப்பேரரசுகளை எல்லாம் அழித்து தென்னிந்தியாவையே சீர்குலைத்து இடிபாடுகளும் சுடுகாடுகளும் மட்டும் எஞ்சச்செய்து டில்லி மீண்டது. மாலிக்காபூர் விட்டுச்சென்ற தளபதிகள் சிற்றரசர்களாக மாறி கொடுங்கோல் ஆட்சியாகச் செய்துவந்தனர். அவர்களை ஒருங்கிணைத்து துருக்கி சுல்தான்கள் டெல்லியில் இருந்துகொண்டு தென்னகத்தை ஆண்டனர்.
இந்நிலையில் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த மாதவர் என்ற துறவி (ஸ்ரீவித்யாரண்யர் என்று இவருக்கு பட்டபெயர் உண்டு. ) துங்கபத்ரா நதிக்கரையில் ஆனைக்குந்தி என்ற மலையடிவாரக் காடுகளில் தங்கியிருந்தார். அங்கே அவர் சந்தித்த 'ஹரிஹரர் புக்கர்' என்ற இரு சகோதரர்கள் அவர் கவனத்திற்கு வந்தனர். அவர்கள் ஏற்கனவே காகதீய அரசு போன்ற பல அரசுகளில் போர்ப்பணியாற்றியவர்கள். ஆனைக்குந்தியில் இருந்த பழைய யாதவ அரசொன்றின் அரசகுலத்தவர். சுல்தான்களால் இளமையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கே மதமாற்றம் செய்யப்பட்டனர். மீண்டும் இப்பகுதிக்கு ஆட்சியாளர்களாக அனுப்பட்டனர். அவர்கள் தங்களுக்கென சிறு படை கொண்டிருந்தனர். 1336ல் அவர்களைக் கொண்டு அந்த மலையடிவாரத்தில் 'விஜய நகரம்' என்ற நகரத்தை நிறுவச்செய்தார் மாதவர்.
[அக்காலத்து அரசியல் நிலையில்லாமையைப் பயன்படுத்திக் கொண்டு நிலைபெற்று வளர்ந்து மூன்று நூற்றாண்டுக்காலம் நீண்ட விஜய நகரப் பேராரசு தென்னிந்தியாவில் இந்துப்பண்பாட்டை நிலைநாட்டிய மாபெரும் சக்தியாகும். இன்று இந்தியாவில் விஜயநகர ஆட்சி இருந்த பகுதிகளில்மட்டுமே மாபெரும் ஆலயங்கள் எஞ்சியுள்ளன.]
புக்கரின் மகனான குமார கம்பணன் அன்று துருக்கி சுல்தானின் தளபதியான அல்லாவுதீன் சிக்கந்தர் ஆட்சியில் மதுரை சிதைந்து பாழடைந்து கிடப்பதை அறிந்து 1371ல் மதுரைமீது படையெடுத்து வந்து கைப்பற்றினார். குமார கம்பணரின் மனைவியான கங்கம்மாதேவி எழுதிய ”மதுராவிஜயம்’ என்ற சம்ஸ்கிருத காவியம் இந்நிகழ்ச்சியை வர்ணிக்கிறது. அப்போது மதுரை மீனாட்சி ஆலயம் இடிக்கப்பட்டு மதுரை தேவி திருவாங்கூரில் [குமரிமாவட்டத்தில்] உள்ள சிறு மீனாட்சியம்மை கோயிலில் வைக்கப்பட்டிருந்தாள். குமார கம்பணன் மதுரை கோயிலை மீண்டும் கட்டவும் தேவியை மீண்டும் பிரதிஷ்டை செய்யவும் ஏற்பாடு செய்தார்.
விஸ்வநாத நாயக்கனின் அமைச்சர் அரியநாத முதலியார் தென்னகம் முழுக்க தன் படையால் வென்று நாயக்க சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார். நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கோயிலை அரியநாதர் அமைத்தார். அரியநாதர் தான் தென்னகத்தை 72 பாளையபப்ட்டுகளாக பிரித்து அவற்றுக்கு பாளையக்காரர்களை முதன்முதலில் நியமித்தார்.
அதன் பின் நாயக்க வம்சம் மதுரையில் தொடர்ந்து அரசாண்டது. அதில் குறிப்பிடத்தக்க இருவர் திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆவார்கள். கிட்டத்தட்ட தஞ்சை தவிர உள்ள தமிழகத்தை முழுக்க ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் 'திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு' என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் 1635இல் ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் வசந்த விழா கொண்டாடுவதற்காக புதுமண்டபத்தைக் கட்டினார். பழைய மதுரை நகரைத் திருத்தி அமைத்தார். 'திருமலை நாயக்கர் மகால்' என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.
திருமலை நாயக்கரின் சிறப்பியல்பு சைவ, வைணவ ஆலயங்களுக்கு சீராக திருப்பணி செய்ததாகும். கிறித்தவ மதபோதகர்களை ஆதரித்திருக்கிறார். இஸ்லாமிய தர்காக்களையும் ஆதரித்திருக்கிறார். இன்றைய மதுரை என்பது திருமலை மன்னரின் ஆக்கம் என்றால் மிகையல்ல. மதுரையின் தெருக்கள் ஆலயங்கள் மாபெரும் தெப்பக்குளங்கள் சுற்றியுள்ள மாபெரும் ஏரிகள் இன்றுள்ள பெரும் திருவிழாக்கள் எல்லாமே திருமலை மன்னாரால் உருவாக்கப்பட்டவை.
திருமலை நாயக்கர் ஆண்ட பகுதிகள்:-
திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல்,
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை,
மணப்பாறை, கோயம்புத்தூர், சேலம் மற்றும்
திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன.
இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளையக்காரர்கள்தான்.
( குறிப்பு:- பாளையம் (ஆட்சி நிர்வாக முறை) "பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். பாளையக்காரர்கள் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்த நாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார்.)

கி.பி. 1656ல் 70 வயதாகி இருந்த திருமலை நாயக்கரை மைசூர் படை பழிவாங்க வஞ்சம் தீர்க்கும் எண்ணத்துடன், மதுரை நாட்டிற்கு கம்பையா என்ற மிகக் கொடியவன் மைசூர்படைக்கு தலைமை ஏற்று வந்தான். மைசூர் மன்னன் கட்டளைப்படி மதுரை நாட்டிற்குள் புகுந்து ஆண், பெண்கள் குழந்தைகள் இப்படி ஆயிரக்கணக்கான பேர்களை பிடித்து அவர்களின் மூக்கை அறுத்து சாக்குப் பைகளில் போட்டுக் கட்டி மைசூருக்கு அனுப்பி வைத்தான். அதோடு நிறுத்தாமல் கொள்ளையும் அடித்தான். சிக்கியவர்களை வெட்டிக் கொலைகளும் செய்தான். இதை அறிந்த திருமலை மன்னர், தன்னரசு நாட்டுத் தலைவர் திருமலை பின்னத்தேவருக்கும், இராமநாதபுரம் சேதுபதிக்கும் தன் பட்டத்து ராணி மூலம் கடிதம் எழுதி, மதுரையைக் காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதைக் கண்டவுடன் தாமதியாமல் தன் படைகளுடன் வந்து மதுரை படைகளையும் ஒன்று சேர்த்து கடும் போர் செய்த மைசூர் படைக்கு பெரிய சேதத்தை உண்டாக்கி விரட்டியடித்து விட்டு மதுரையைக் காத்தார். இந்த போரில் இரு தரப்பினரிலும் உயிர் விட்டவர்கள் அதிகம்.
அதே நேரத்தில் தன்னரசு படைகள், கன்னிவாடி, விருப்பாச்சி படைகளை சேர்த்துக்கொண்டு மைசூர் படைகளை விரட்டித் தொடர்ந்து சென்றனர். 'திருமலை பின்னத்தேவர்' தலைமையில் சென்ற படைகள், மதுரையில் பொது மக்களின் மூக்கை அறுத்த போது தளபதியாக இருந்த தளபதி கம்பையாவின் மூக்கையும், கடுக்கனோடு காதையம் ஆறுத்துக் கொண்டு மதுரை வந்தார்கள். மைசூர் மக்களுக்கும் அவர்களின் படைகளுக்கும் தொல்லை கொடுக்காமல் தளபதியை மட்டும் இப்படிச் செய்து வந்ததை அறிந்த திருமலை நாயக்க மன்னர், பின்னத்தேவருக்கு 'மூக்குப்பறி' என்ற பட்டம் வழங்கினார். சேதுபதிக்கு 'திருமலை சேதுபதி'என்ற பட்டமும் 'ராணி சொல் காத்தான்' என்ற பெயரும் வழங்கினார். இதோடு நிற்காமல் சேதுபதி இனிமேல் நீ எனக்கு கப்பம் கட்ட வேண்டாம் என்ற உத்தரவும் கொடுத்து இராமநாதபுரத்திற்கு தகுந்த மரியாதையுடன் அனுப்பி வைத்தார்.
சரி! நாம் இராமாயணச்சாவடி இடையர்களின் 'மதுரை வருகை' பற்றிய கதையை தொடங்குவோம் .....!
|| கி.பி.1635ம் ஆண்டு ||
திருமலை மன்னர் புதுமண்டபம் கட்டிக்கொண்டிருந்த காலகட்டம்.
திருநெல்வேலி வட்டாரத்தில் வாழ்ந்த புதுநாட்டு இடையர்களுக்கு அங்கிருந்த ஒரு பாளையக்காரன் தொந்தரவு சகிக்க முடியாமலிருந்தபடியால் அந்த புதுநாட்டு இடையர்கள் ஒன்று சேர்ந்து மதுரைக்கு வந்து திருமலை நாயக்க மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள். திருமலை நாயக்கரும் எட்டு நாட்டு கள்ளர் தலைவன் திருமலை பின்னதேவரை புதுநாட்டு இடையர்கள் அதிபதியாக நியமித்து அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பரிபாலித்து வரும்படியாகச் செய்தார்.
யார் அந்த நாட்டு இடையர்கள்? யார் அந்த

எட்டு நாட்டுக் கள்ளர்?
இது பற்றிய ஆதாரக்கதைகளை விரிவாக அடுத்த பதிவு -Post ல பார்ப்போம்.

அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
*(Edgar Thurston CIE (1855– 12 October 1935) was a superintendent at the Madras Government Museum who contributed to studies in the zoology, ethnology and botany of India and published works related to his work at the museum. Thurston was educated in medicine and lectured in anatomy at the Madras Medical College while also holding his position at the museum. His early works were on numismatics and geology and these were followed by researches in anthropology andethnography. He succeeded Frederick S. Mullaly as the superintendent of ethnography for the Madras Presidency.
ReplyDeleteEdgar Thurston wrote the seven volumes of Castes and Tribes of Southern India, published in 1909 as part of the Ethnographic Survey of India. In that work he was assisted by K. Rangachari, a colleague from the Madras museum who had also assisted him in a 1906 ethnographic study, Ethnographic Notes in Southern India. Rangachari had supplied most of the forty photographs used in this earlier study.)*
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்