ஆறுபடையா? ஆற்றுப்படையா?
• ஆற்றுப்படை விளக்கம்
ஆறு என்னும் சொல்லுக்க வழி அல்லது நெறி என்பது பொருளாகும். ஆற்றுப்படுத்தும் என்றால் அறிந்தானொருவன் அறியாதான் ஒருவனை வழிப்படுத்தலாகும். வறுமையோடு இருப்பவனை அவன் துயர்களைப் போக்கி பெருஞ்செல்வம் பெறுமாறு அவரையும் வழிப்படுத்துதலே ஆற்றுப்படை என்னும் நூலாகும். இலக்கியச் சொல்லகராதியும் ஆற்றுப்படுத்தலுக்கு வழிப்படுத்தின என்ற பொருளையே கூறுகின்றன. ஆற்றுப்படை என்பது ஒருவகையான பாடல் மரபுடையது. புரவலரைக் காணாது வறுமையில் வாடுகின்றான் ஒரு கலைஞன். புரவலன் ஒருவனைக் கண்டு பரிசில்கள் பெற்று சீரும் சிறப்புமாகத் திரும்புகின்றான் மற்றொரு கலைஞன். இவன் அவனைப் பார்க்கின்றான், இரக்கத்தால் அவன் வாழ வழி காட்டுகின்றான். அவன் புரவலனிடத்து சென்றால் வறுமை தீரும், கலை வளரும், தன்மானம் அழியாது எனக் கூறி பாணர், கூத்தர், பொருநர், விறலியர், புலவன் போன்றோர் வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை தாம் பெற்றவற்றை எல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும் என்று கலைக்களஞ்சியம் கூறுகின்றது.
• ஆற்றுப்படை இலக்கணம்
தொல்காப்பியம் ஆற்றுப்படை நூலுக்கு இலக்கணம் கூறுகிறது. வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை.
புறத்திணையின் திணைகளில் ஒன்றான பாடாண் திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியர் ஆற்றுப்படையைக் குறிப்பிடுகிறார்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம் – தொல்காப்பியம், (புறத்திணையியல்- 88)
சங்ககால எட்டுத்தொகை நூல்களில் ஆற்றுப்படைப் பாடல்கள் உள்ளன. சங்கநூல் பத்துப்பாட்டில் ஐந்து பாட்டுகள் ஆற்றுப்படை நூல்கள்.
அவற்றுள் திருமுருகாற்றுப்படை நக்கீரால் பாடியதாகும். இவர் முருகப் பெருமானின் மீதுள்ள அன்பின் காரணமாக 317 அடிகளில் ஆசிரியப்பாவால் பாடப் பெற்றவையாகும்.
திருமுருகாற்றுப்படை
சங்க இலக்கியத்தில் சமய நெடும் பாடலாகவும், பதினோராந்திரு முறையில் வைத்துப் போற்றப் பெறுவதாகவும் அமைந்துள்ளன.
முருகனிடம் அருள் பெற்ற புலவர் இன்னொரு புலவனைப் பார்த்து முருகனின் வீடுகளுக்குச் சென்று அவனைப் போற்றி வணங்கி யாராலும் பெற முடியாத பரிசு பெற்றுக்கொள் என்ற கருத்து இந்நிலையில் உள்ளது.
Aartruppadai is a literary device by which a bard or a minstrel who has received bountiful gifts from some wealthy patron is supposed to direct another to the same Maecenas. This gives the occasion to the poet, among other topics, to describe in great detail the natural beauty, fertility, and resources of the territory that has to be traversed to reach the palace of the patron. Tirumurugartruppadai or 'Guide to Lord Murugan' suggests that those who need spiritual guidance should seek out Lord Murukan.
புலவர் மற்றொரு புலவரை ஆற்றுப்படுத்தியதால் இந்நூல் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். (வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் நிருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது)
ஆற்றுப்படையா? ஆறுபடையா? என்று
'அழகர் கோயில் 'எனும் நூலில்
ஆய்வின் ஆசான் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் விரிவாக விவவரித்துள்ளார்.
இந்த நூல் நான் பலமுறை ரசித்து படித்த ஆய்வு நூல்
அழகர்கோயிலின் அமைப்பு, புராணத்தகவல்கள், வரலாற்றுச் செய்திகளோடு அழகர் கோயிலை சுற்றியுள்ள சமூக மக்களுக்கும் அழகர்கோயிலுக்கும் உள்ள தொடர்பை பேராசியர் தொ.பரமசிவன் அவர்கள் எளிமையாக விளக்குகிறார்.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் பதிப்புத்துறையால் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில் முழுக்க முழுக்கப் புள்ளிவிபரங்கள் நிறைந்த ஆவண நூலாகும்.
இந்நூலில் அனைத்தும் விவரிக்கப்பட்டிருக்கின்றன. 76 - 79 ஆகிய மூன்று ஆண்டுகளில் நிகழ்த்திய ஆய்வின் விளைவாக எழுதப்பட்டநூலானது நான்கு பாகமாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. .
• முதல் பாகத்தில் அழகர் கோயிலின் அமைப்பு, தோற்றம், இலக்கியங்களில் இது பற்றிக் கூறப்பட்டிருப்பது, சமூகத்தொடர்பு, பல்வேறு சாதி சமயத்தாருடன் தொடர்பு, திருவிழாக்கள், மரபுக் கதைகள், செவிவழி வர்ணிப்புப் பாடல்கள், நாட்டுப்புறக்கூறுகள், பரம்பரைப் பணியாளர்கள், பதினெட்டாம்படிக் கருப்பசாமி, பழமுதிர்சோலை, வாலி வழிபாடு, கல்வெட்டுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன.
• இரண்டாம் பாகத்தில் அழகர் அகவல்,வண்ணம், வர்ணிப்பு, வலையன் கதை, பதினெட்டாம்படிக் கருப்பர் உற்பத்தி வர்ணிப்பு, பிறப்பு வளர்ப்பு வர்ணிப்பு, ராக்காயி வர்ணிப்பும் கருப்பசாமி சந்தனம் சாத்தும் வர்ணிப்பு இடம் பெறுகிறது.
• மூன்றாம் பகுதியில் வெள்ளியக்குன்றம் பட்டயம் 1, 2, தொழில் அட்டவணை, ஆட்டவிசேஷம் , கோடைத்திருநாள் சித்திரைப் பெருவிழா, வெள்ளையத்தாத்தா வீட்டுப் பட்டய நகல் ஓலை இடம் பெற்றுள்ளன.
• நான்காம்பாகத்தில் வேடமிட்டு வழிபடும் அடியவர்கள், வினாப்பட்டியும் விடையளித்தோர் பட்டியலும், சித்திரைத் திருவிழாவுக்கு மாட்டுவண்டி கட்டி வந்த அடியவர்களின் ஊர்கள், வரைபடங்கள், துணைநூற்பட்டியல், புகைப்படங்கள் என முழுமையான ஆய்வு நூலாகத் திகழ்கிறது.
அழகர்கோயிலை சுற்றி உருவான நிலமானிய அமைப்பு, சாதிக்கட்டுமானம், திருவிழாக்களில் அடுக்கதிகாரம் வெளிப்படும் முறைகள் குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளார். தமிழில் செவ்வியல்தன்மை கொண்ட முதல் வழிகாட்டி நூலாக ‘அழகர்கோயில்’ கருதப்படுகிறது என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
இந்நூலின் முதற்பாகத்தின் பிற்சேர்க்கையாக அறுபடைவீடுகளும் பழமுதிர்சோலையும் என்கிற கட்டுரையில் (பக்கம்-258 பதிப்பு-1989) அவர் முன் வைக்கும் வாதங்கள் படிக்கப்படிக்க ஆச்சர்யமூட்டும் ஒன்றாகும்.
முருகன் அறுபடை வீடுகளுக்கு உரியவன் என்பது தமிழர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. பரங்குன்றம்,அலைவாய்(திருச்செந்தூர்),ஆவிநன்குடி(பழனி),ஏரகம்,குன்றுதோறாடல்,பழமுதிர்ச்சோலை ஆகிய ஊர்களை அறுபடை வீடுகள் என்பர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையினையே இக்கருத்துக்கு முதற்சான்றாக காட்டுவர் என்று கட்டுரையின் தொடக்கம் உள்ளது.
(நக்கீரர். திருமுருகாற்றுப்படை 296-317) என்ற வரிகளைக் கொண்டு பழமுதிர்ச்சோலை என்னும் தலம் மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலே என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. 14ம் நூற்றாண்டினரான கந்த புராண ஆசிரியர் பழமுதிர்ச்சோலை என்பது ஒரு முருகன் தலம் போலத் தம் நூற்பாயிரத்தில் (பாடல் 7-12) பாடுகிறார். 15ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதரும் இச்சோலைமலையே பழமுதிர்சோலை என்று கருதி ‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர…
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
பாடியுள்ளார்.
பரங்குன்றம்,அலைவாய்,ஆவிநன்குடி,ஏரகம் ஆகிய நான்கு மட்டுமே திருமுருகாற்றுப்படையில் நக்கீரன் குறிப்பிடும் முருகன் தலங்கள். இதில் "திருவேரகம்" பற்றிய குழப்பமும் உள்ளது.
குன்று தோறாடல் என்ற சொல்லுக்கு 'முருகன் மலைதோறும் ஆடல் கொண்டவன்' என்பது பொருளாகும். குன்று தோறாடல் எனுந் தலைப்பில் அமைந்த திருப்புகழ்ப் பாடல்கள் ஐந்தும்,
"பல குன்றிலும மர்ந்த பெருமாளே"
"பல மலையுடைய பெருமாளே"
"மலை யாவையும் மேவிய பெருமாளே"
"குன்று தோறாடல்மேவு பெருமாளே"
என்றே முடிகின்றன.
இதனைக் கொண்டு 'குன்றுதோறாடல்' என்னும் பெயரோடு ஒரு முருகன் தலம் இருந்ததாக வாதாட இயலாது என்று மா.இராசமாணிக்கனார் கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி பேராசிரியர் தொ.பரமசிவன் தனது கட்டுரையைத் தொடர்கிறார்.
பழமுதிர்சோலை ஆறாவது படைவீடுதானா?
திருமாலடியார் திருமாலிருஞ்சோலை என்கின்றனர். அவர்கள் சோலைமலை என வழங்குவதும் முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலை வழங்குவதும் ஒத்திருப்பது பற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராயத்தக்கது.
பழமுதிர்சோலை எற ஒரு மலை முருகனுக்கு உரியது என்பதற்கோ சங்க நூல்களிலும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் சான்று இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லே மக்கள் வழக்கில் 'ஆறுப்படை வீடு' எத் திரிந்தது. எனவே தான் திருமுருகாற்றுப்படையில் வரும் குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை மலை என்னும் இரண்டு சொற்களையும் இரண்டு முருகன் திருப்பதிகளின் பெயர்கள் என்று தவறாகக் கருத இடமேற்ப்பட்டது. தமிழ் நாட்டில் முருகன் திருப்பதிகள் சங்க காலத்திலும் நிறைய இருந்தன. இனால் ஆறுபடை வீடு என்பது மக்களிடையே பிறந்த நம்பிக்கை தான். வரலாற்று உண்மையன்று. முருகாற்றுப்படையின் அடிகளுக்குத் தவறான பொருள் கண்டதால் இந்த நம்பிக்கை வளர்ந்தது என தனது கட்டுரையை முடிக்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
அது மட்டுமல்ல, அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமாக உள்ளதால் அக்கோயில் பௌத்தர்களின் வழிபாட்டுத்தலம் என்றும் தன் ஆய்வேட்டில் வாதங்களைப் பதிவு செய்துள்ளார்.
அது பற்றி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

”பலவுடன் வேறு பல்துகிலின் நுடங்கி அகில் சுமந்து….
இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழவோனே”(நக்கீரர். திருமுருகாற்றுப்படை 296-317) என்ற வரிகளைக் கொண்டு பழமுதிர்ச்சோலை என்னும் தலம் மதுரைக்கு அருகிலுள்ள அழகர் கோயிலே என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. 14ம் நூற்றாண்டினரான கந்த புராண ஆசிரியர் பழமுதிர்ச்சோலை என்பது ஒரு முருகன் தலம் போலத் தம் நூற்பாயிரத்தில் (பாடல் 7-12) பாடுகிறார். 15ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதரும் இச்சோலைமலையே பழமுதிர்சோலை என்று கருதி ‘ஆயிர முகங்கள் கொண்ட நூபுர மிரங்கு கங்கை
ஆறமர லந்தலம்பு துறைசேர…
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த பெருமாளே…’
பாடியுள்ளார்.
படை வீடு என்ற சொல் போர் வீரர் படை தங்கியிருக்கும் இடத்தைக் குறிப்பதாகும். இதனைப் பாடி வீடு என்று குறிப்பிடுவதும் உண்டு. முருகன் அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் சூரபதுமனைப் போரிட்டு அழித்தான். எனவே அது 'படை வீடு' எனப்படும் தகுதி பெற்றது. பரங்குன்றிலோ,ஆவிநன்குடியிலோ,திருவேரகத்திலோ முருகன் போர்க்கோலம் கொண்டதாகவோ எவ்வகையான புராணச் செய்திகளும் இல்லை. அப்படியானால் அவற்றைப் படை வீடு என்று அழைப்பது எப்படிப் பொருந்தும்? என படிக்கும் நம்மிடம் கேள்வி கேட்கிறார் பேராசிரியர் தொ.பரமசிவன்.
பரங்குன்றம்,அலைவாய்,ஆவிநன்குடி,ஏரகம் ஆகிய நான்கு மட்டுமே திருமுருகாற்றுப்படையில் நக்கீரன் குறிப்பிடும் முருகன் தலங்கள். இதில் "திருவேரகம்" பற்றிய குழப்பமும் உள்ளது.
குன்று தோறாடல் என்ற சொல்லுக்கு 'முருகன் மலைதோறும் ஆடல் கொண்டவன்' என்பது பொருளாகும். குன்று தோறாடல் எனுந் தலைப்பில் அமைந்த திருப்புகழ்ப் பாடல்கள் ஐந்தும்,
"பல குன்றிலும மர்ந்த பெருமாளே"
"பல மலையுடைய பெருமாளே"
"மலை யாவையும் மேவிய பெருமாளே"
"குன்று தோறாடல்மேவு பெருமாளே"
என்றே முடிகின்றன.
இதனைக் கொண்டு 'குன்றுதோறாடல்' என்னும் பெயரோடு ஒரு முருகன் தலம் இருந்ததாக வாதாட இயலாது என்று மா.இராசமாணிக்கனார் கருத்துக்களை மேற்கோளாகக் காட்டி பேராசிரியர் தொ.பரமசிவன் தனது கட்டுரையைத் தொடர்கிறார்.
பழமுதிர்சோலை ஆறாவது படைவீடுதானா?
திருமாலடியார் திருமாலிருஞ்சோலை என்கின்றனர். அவர்கள் சோலைமலை என வழங்குவதும் முருகாற்றுப்படை பழமுதிர்ச்சோலை வழங்குவதும் ஒத்திருப்பது பற்றி இவ்வாறு கோடற்கு இடமுண்டாகிறது. இதுவும் நன்கு ஆராயத்தக்கது.
பழமுதிர்சோலை எற ஒரு மலை முருகனுக்கு உரியது என்பதற்கோ சங்க நூல்களிலும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் சான்று இல்லை.
ஆற்றுப்படை என்னும் சொல்லே மக்கள் வழக்கில் 'ஆறுப்படை வீடு' எத் திரிந்தது. எனவே தான் திருமுருகாற்றுப்படையில் வரும் குன்று தோறாடல், பழமுதிர்ச்சோலை மலை என்னும் இரண்டு சொற்களையும் இரண்டு முருகன் திருப்பதிகளின் பெயர்கள் என்று தவறாகக் கருத இடமேற்ப்பட்டது. தமிழ் நாட்டில் முருகன் திருப்பதிகள் சங்க காலத்திலும் நிறைய இருந்தன. இனால் ஆறுபடை வீடு என்பது மக்களிடையே பிறந்த நம்பிக்கை தான். வரலாற்று உண்மையன்று. முருகாற்றுப்படையின் அடிகளுக்குத் தவறான பொருள் கண்டதால் இந்த நம்பிக்கை வளர்ந்தது என தனது கட்டுரையை முடிக்கிறார் பேரா.தொ.பரமசிவன்.
அது மட்டுமல்ல, அழகர் கோயிலின் கருவறை வட்ட வடிவமாக உள்ளதால் அக்கோயில் பௌத்தர்களின் வழிபாட்டுத்தலம் என்றும் தன் ஆய்வேட்டில் வாதங்களைப் பதிவு செய்துள்ளார்.
அது பற்றி அடுத்த பதிவு-Postல பார்ப்போம்
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
சோலைமலை மண்டபம் :
ReplyDeletehttps://archive.org/details/subburaji2009_gmail_20180905